Sri lanka news

Advertisement

  • Breaking News

    9 குழந்தைகளை சுமக்கும் மெக்சிகோ நாட்டு கர்ப்பிணி பெண்

    மெக்சிகோ நாட்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், ஒன்பது சிசுக்களை சுமந்து கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் 20ம் தேதி இவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண், கடந்த 2009ல் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றது தான் உலக சாதனையாக கருதப்பட்டது.


    இதே போல, தற்போது மெக்சிகோ நாட்டின் கோயஹுய்லா பகுதியை சேர்ந்த கர்லா வனிசா என்ற பெண், ஒன்பது குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லை பகுதிக்கு அருகே இவரது ஊர் உள்ளது. இந்த பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை.

    தற்போது இந்த பெண் சால்டிலோ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், 20ம் தேதி இவரது பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவரது கர்ப்பப்பையில் ஒன்பது சிசுக்கள் உள்ளன. இவற்றில் ஆறு பெண்கள், மூன்று ஆண்கள். அனைத்து குழந்தைகளும் நலமாக பிரசவமாக வேண்டும் என்பதில் மருத்துவர்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

    Fashion

    Beauty

    Culture