
கொழும்பு காலிமுகத்திடல் கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒருவர் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவரே காணாமற் போயுள்ளார்.
காணாமற் போனவரை தேடுவதற்காக சென்ற ஒருவர், தவறி கடலில் வீழ்ந்ததை அடுத்து கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அம்பலந்தொட்டை – பஹலகம பகுதியில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Comments