Sri lanka news

Advertisement

  • Breaking News

    இவன் தான் பாலா - Ivan than bala - PDF Book Download

    இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். மாயாவி எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார். இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞர், தன் அனுபவங்களையே விதைகளாக்கி, விருட்சமாக வளர்ந்து தான் கடந்து வந்த பாதையை இருபத்தோரு வாரங்கள் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் பாலா. அதை அவர் விவரித்த விதமே ஒரு சிலிர்ப்பூட்டும் நாவல்போல அமைந்தது. திரைத்துறையில் வளரத் துடிக்கிற, பொதுவாழ்வில் சாதிக்கத் தவிக்கிற ஒவ்வொரு இளைஞனும் படுகிற அவஸ்தைகளை, சுமக்கிற அவமானங்களை, கடந்து வருகிற தடைகளை போலவே பாலாவும்… ஒரு தேர்ந்த படைப்பாளியாக உருவானதன் ரகசியத்தை விவரிக்கிற இந்த புத்தகம் பல இளைஞர்களால் படிக்கப்பட்டது. படித்துக்கொண்டும் இருக்கிறார்கள். படிக்கப்படும்…

    Fashion

    Beauty

    Culture