
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான முதலீட்டாளர்கள், பொருளியல் துறையில் நோபல் பரிசு வென்ற கலாநிதி ஜோசப் ஸ்டீல்கிலிட்ஸ் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலய நாடுகளிடையேயான அபிவிருத்தி, போட்டித்தன்மை மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
Comments