Sri lanka news

Advertisement

  • Breaking News

    தங்கல்லையில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச உரை

    (அஸ்ரப் ஏ சமத்)
    அண்மையில் அமைச்சரவையில் ஹம்பாந்தோட்டையில் உள்ள  மத்தல விமான நிலையத்தை உள்ள கட்டிடத்தினை  ஹம்பாந்தோட்டை விவசாயிகளின்   நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு  பாவிப்பதற்கு  ஒரு அமைச்சா் அமைச்சரவை பத்திரம் தயாரித்திருந்தாா்..  ஆனால் அதனை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள வில்லை. இது தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச செய்த அபிவிருத்திகள்.  இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம்  ருபா கடன் காரா்களாக உள்ளனா்.  என அமைச்சா் சஜித் பிரேமதாச  தெரிவிப்பு

    ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாழும் மக்கள் இன்னும் வருமைக் கோட்டின் கீழ்தான்  வாழ்கின்றனா். இந்த மாவட்டத்தினை பிரநிதித்துவப்டுத்துவா்கள் கடந்த 9 ஆண்டுகளாக குடும்பமாக  இந்த நாட்டை ஆண்டாா்கள். ஆனால் இந்த மக்களுக்கு இருப்பதற்கு வீடோ அல்லது அவா்களது அடிப்படை வசதிகள் இல்லாமலே இன்றும் வாழ்கின்றனா். கூடுதலாக சமுா்த்தி பெறும் குடும்பங்கள் இப்பிரதேசத்திலேயே உள்ளனா்
    என தங்கல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச உரையாற்றினாா்

    அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் 

    எனது தந்தை ஆர்.பிரேமதாச அவா்கள் முன்னெடுத்த கம்உதாவ, ஜனசவிய போன்ற திட்டங்களை வேறு பெயா்களில் மாற்றி தத்தமது  கட்சி ஆதரவாளா்களுக்கே உதவியுள்ளாா்கள்  உண்மையான ஏழை மக்களது வாழ்வில் இதுவரை விடிவுகிட்டவில்லை. ஹம்பாந்தோட்டை யில் உள்ள துறைமுகம் மற்றும்  விமாணநிலையம் அமைத்தாதல் இந்த மக்களது வாழ்க்கைத்தரத்திற்கு விமோசனம் கிடைக்கவில்லை  அவா்கள் மாபெறும் நிர்மாண ஒப்தங்களுக்கு கொமிசன் பெற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளாா்கள். 
    அண்மையில் அமைச்சரவையில் மத்தல விமான நிலையத்தை உள்ள கட்டிடத்தினை  ஹம்பாந்தோட்டை விவசாயிகளின்   நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு  பாவிப்பதற்கு  ஒரு அமைச்சா் அமைச்சரவை பத்திரம் தயாரித்திருந்தாா்.

    ஜ.தே.கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ஆர் .பிரேமதாசாவின் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.


    Fashion

    Beauty

    Culture