வீட்டில் யாரும் இல்லாதநேரம் பார்த்து ஜன்னல் கம்பிகளைக் கழற்றி உட்புகுந்த திருடர்கள் 7 ஆயிரம் ரூபா பணத்தையும் உண்டியலில் சேகரித்து வைக்கப்பட்ட பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பகல்வேளை பொன்னாலை சங்கானை பிரதான வீதியில்அமைந்துள்ள பாலகிருஷ்ணன் உதயகுமார் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளைஇ கடந்த வாரமளவில் சங்கானை பேருந்து நிலையத்திற்கருகாமையில் அமைந்துள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சீற் மற்றும் இதர வேலைகள் செய்து கொடுக்கும் கடையொன்றில் கடை உரிமையாளர் வெளியே சென்ற சமயம் கடையின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூபா 20 ஆயிரம் பணத்தை பகல் வேளை ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
Comments