Sri lanka news

Advertisement

  • Breaking News

    கம்பியூட்டரை அசம்பில் செய்யும் முறை !

    நான் ஒரு கம்ப்யூட்டரை Assemble செய்ய நினைக்கிறேன் அதற்க்கு என்னென்ன கம்ப்யூட்டர் Parts கள் வாங்க வேண்டும் என்னென்ன விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் ?


    நீங்கள் ஒரு கம்ப்யூட்டரை அசம்பில் அதாவது கம்ப்யூட்டர் பாட்ஸ்களை தனித்தனியாக வாங்கி நீங்களே செட்டப் செய்து உருவாக்கப்போகிறீர்கள் என்றால் முதலில்
    மானிட்டர் - Monitor
    மதர்போர்ட் - Mother Board
    ப்ராசசர் - Processor
    ஹார்ட் டிஸ்க் - Hard Disk
    ராம் - Ram
    சி.பி.யூ கவர் - CPU Cover
    டி.வி.டி பிளேயர் - DVD-RW
    கீ போர்ட் - Key Board
    மவுஸ் - Mouse
    இவைகளை இனைக்கும் கேபில்கள் - Power Cable
    இவை அனைத்தும் நீங்கள் வாங்கவேண்டும்

    மானிட்டர் நீங்கள் விரும்பிய ப்ராண்ட் எதுவானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் அதாவது ViewSonic, Dell, HP, Acer, Samsung, Benq என பல முக்கிய ப்ராண்டுகள் கிடைக்கின்றன இதில் உங்களூக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்ளலாம்.

    அடுத்து மதர்போர்ட் இதில் மிக முக்கியமாக Intel என்ற தரம்மிக்க மதர்போர்ட் பார்த்து வாங்குவது நல்லது


    அடுத்து Processor இதுவும் Intel ப்ராண்டு பார்த்து வாங்க்குவது நல்லது. இநத Intel ப்ராண்டு Processor ல் Intel Pentium 4, Intel Due core, Intel Core 2 Due என்று உங்கள் பட்ஜெட்டிற்க்கு தகுந்தமாதிரி வாங்கிக்கொள்ளூங்கள்.

    அடுத்து RAM இதில் முக்கிய ப்ராண்டு என்று கேட்டு வாங்குவது சிரமம் நீங்கள் பார்ட்ஸ் வாங்கும் இடத்தில் கிடைப்பதில் எது நல்ல ப்ராண்டோ அதை வாங்கிக்கொள்ளலாம் ஆனால் முக்கியமாக அதன் வேகம் 1அல்லது 2 GB இருப்பது நல்லது. முக்கியமாக நீங்கள் வாங்கும் மதர்போர்டுக்கு பொரு ந்தும் வகையில் உங்கள் RAM இருக்கவேண்டும் DDR1 என்ற டைப் ராம் பழைய மதர்போர்களுக்குத்தான் பொருந்தும். புதிதாக வந்துள்ள Core, Due Core டைப் Processor களுக்கு DDR2 என்ற டைப் RAM தான் பொருந்தும். இ ந்த DDR2 விலும் அதன் வேகத்தின் அளவில் வித்தியாசம் இருக்கிறது.

    அடுத்து ஹார்ட் டிஸ்க் இதில் அதன் அளவு என்னவென்று பார்த்து வாங்க வேண்டும். தற்ப்பொழுது 80 GB 160 GB 250 GB என பல அளவுகளில் கிடைக்கிறது உங்கள் பட்ஜெட்டிற்கு தகுதகுந்தமாதிரி வாங்கிக்கொள்ளூங்கள். இதில் நல்ல ப்ராண்ட் என்றால் Seagate, WD, Toshiba, Samsung என்று சில முக்கியமானவை உண்டு.

    அடுத்து CPU கவர் இதில் உங்க்ள் கம்யூட்டர் பார்ட்ஸ்களை பொருத்தக்கூடிய எல்லாவகையான செட்டப்பப்பும் செய்யப்பட்டு இருக்கும். இதில் ஒரு பவர் பாக்ஸும் (smps) இனைந்து இருக்கும்.

    அடுத்து பிளேயர் இதில் CD-ROM, CD-RW, DVD-ROM, DVD-RW என்று பல வகை உண்டு. உங்கள் பட்ஜெட்டுக்கு தகு ந்ததுபோல் வாங்க்கிக்கொள்ளலாம். CD-ROM என்றால் CD ஐ போட்டு பார்க்கத்தான் முடியும் அதை காப்பி பன்ன முடியாது. CD-RWஎன்றால் CDஐ பார்க்கவும் செய்யலாம், காப்பியும் பன்னலாம். அதுபோல DVD-ROM என்றால் CD மற்றும் DVD ஐ பார்க்கலாம் காப்பி பன்ன முடியாது. DVD-RWஎன்றால் DVD ஐ பார்க்கலாம் மற்றும் DVD ஐ காப்பி பன்னலாம் அனைத்து வசதிகளும் இதில் உள்ளது.

    அடுத்து Key Board, Mouse இதை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. நீங்களே நல்லதாக பார்த்து வாங்கிக்கொள்ளலாம்.
    புதிய வரவான USB பின் உள்ள Keyboard, Mouse வாங்குவது நல்லது.

    அடுத்து மானிட்டர் பவர் கேபில், மற்றும் CPU பவர் கேபில் இவை முக்கியம். நீங்கள் புதிதாக மானிட்டர் வாங்கும்போது மானிட்டர் பேக்கிங்கில் ஒரு பவர்கார்ட் இருக்கும். ஆனால் CPU பாகங்களை நீங்கள் தனித்தனியாக வாங்குவதால் அதை AC Power ல் இனைக்க உங்களுக்கு ஒரு பவர் கார்ட் முக்கியம் தேவை எனவே மறக்காமல் வாங்கிக்கொள்ளவும்.


    Fashion

    Beauty

    Culture