
ரொசாலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொரியின் சுக்கான் திடீரென இயங்காத நிலையில் சாரதி கட்டுபாட்டை இழந்து லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதில் சாரதி உட்பட மேலுமொருவராக இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
மேலும். காயங்களுக்குள்ளான இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் தொடர்கின்றனர்.
Comments