
சமூக நெகிழ் திறன் நிலையம்(Community Resilient Center) அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் மற்றும் அனர்த்தம் நிகழ்ந்த பின்னரான முகாமைத்துவம் என்பவற்றில் தனது பங்களிப்பை ஆற்றிவருகின்றது. இதன் ஒரு கட்டமாக போருக்கு பின்னரான புரிந்துணர்வையும், சமாதானத்தையும் கட்டியெழுப்புவதனை நோக்காக கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாதேவ் ஆசிரமத்தில் மகிழ்வூட்டும் தினத்தை கடந்த 1 ஆம்திகதி ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வில் சமூக நெகிழ்திறன் நிலைய உறுப்பினர்கள் பங்கு பற்றியதுடன்,
இலங்கை இரானுவத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தனா். ஏரோபிரிட்ஜ் நிறுவத்தினர் நத்தார்பரிசுகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் சுகவாழ்வுக்கான
பொருட்களையும் அன்பளிப்பு செய்தனர். நிகழ்வில் சமூக நெகிழ்திறன்
நிலையத்தின் சர்வதேச தன்னார்வ தொண்டர் (அமெ) ஸ்டபெனி வென்க்ளெவ் மற்றும் வை.நொவில் விஜேசேகர (தலைவர்) ஆகியோரும் பங்கேற்றனர்.
Comments