Sri lanka news

Advertisement

  • Breaking News

    பந்தய பணத்திற்காக 28 முட்டைகளை சாப்பிட்டவர் உயிர் இழந்தார்


    பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் போது சில நேரங்களில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படுவதுண்டு. இது போன்ற ஒரு பந்தயம் உயிரையே பறித்த சம்பவம் துனிசியா நாட்டில் நடந்தது. அங்குள்ள கைரூமஸ் என்ற இடத்தை சேர்ந்த தாவூத் பாத்னாச்சி (வயது 20) என்பவருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே ஒரு போட்டி உருவானது. எத்தனை முட்டைகளை சாப்பிடுகிறாரோ? அதற்கு ஏற்ப பணம் தருவதாக கூறினர்.

    இந்த சவாலை ஏற்று தாவூத் 28 முட்டைகளை உடைத்து அப்படியே வயிற்றுக்குள் தள்ளினார். சற்று நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டு துடிதுடித்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. சாவு ஏற்பட காரணம் என்ன? என்பது வெளியிடப்படவில்லை. இருப்பினும்  உயிரே பறி போய் விட்டது.

    Fashion

    Beauty

    Culture