Sri lanka news

Advertisement

  • Breaking News

    அவுஸ்திரேலியவிற்கு எதிராக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி


    அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

    பிறிஸ்பேர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 75 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழுந்து வெற்றிபெற்றது.

    போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ்சை இலங்கைப் பந்துவீச்சாளர் 74 ஒட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.

    இதன்பிரகாரம் அவுஸ்திரேலிய அணி 26.4  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

    அவுஸ்திரேலிய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெற்றுக் கொண்ட இரண்டாவது ஆகக் குறைந்த ஒட்ட எண்ணிக்கை  இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிறப்பாக பந்துவீசிய நுவன் குலசேகர ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், லசித் மலிங்க மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    போட்டியின் சிறப்பாட்டக்காரராக நுவன் குலசேகர தெரிவானார்.

    Fashion

    Beauty

    Culture