Sri lanka news

Advertisement

  • Breaking News

    இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்ரியில் அனுமதி


    இங்கிலந்து ராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் தவிக்கும் அவருக்கு இரண்டு நாட்கள் கிங் எட்வர்ட் (KING EDWARD 7) என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரண்மனை செய்திகள் தெரிவிக்கின்றன.


    86 வயதாகும் ராணி எலிசபெத் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பை தந்து வருவதாகவும், அவர் உற்சாகத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை காலத்தில் அவருக்கு நல்ல ஓய்வு கிடைக்கும் என ராணியின் உதவியாளர்கள் நம்புகின்றனர்.

    இதனால் அவரது ரோம் பயணம் உள்ளிட்ட அலுவல்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்பட்டும் என தெரிகிறது. விருந்தினர்கள் ராணியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    அவர் உட்கொண்ட உணவினால் அவருக்கு இந்த வயிற்று வலி ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் ராணி விரைவில் குணம் பெற வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    Fashion

    Beauty

    Culture