Sri lanka news

Advertisement

  • Breaking News

    சவூதியில் இலவசமாக பேசி கொள்ள உதவும் Skype, Viber க்கு தடை

    இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப், செய்திகளை பரிமாற கொள்ள உதவும் வாட்ஸ் அப் , வைபர்  (skype,viber,whatsup) போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.

     இது தொடர்பாக சவூதியின் தகவல் மற்றும் தொலை தொடர்பு ஆணையம் சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இச்சேவை தொடர முடியா பட்சத்தில் தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்கைப், வாட்ஸ அப் போன்ற அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் பாதிப்பால் தான் இம்முடிவு எடுக்கப்படுவதாக கூறுவதை மறுத்துள்ள சவூதி தொலை தொடர்பு ஆணையம் சவூதியின் பாதுகாப்பு கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 2010ஆம் ஆண்டு ப்ளாக்பெர்ரி தொலைபேசி வழியாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை கண்காணிக்க முடியவில்லை என்றும் அதனால் தீவிரவாதத்திற்கு எதிரான தமது போரில் பின்னடைவு ஏற்படும்
    என்றும் கூறி ப்ளாக்பெர்ரி போன்களுக்கு சவூதியில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    http://www.bbc.co.uk/news/world-middle-east-21932432

    Fashion

    Beauty

    Culture