Sri lanka news

Advertisement

  • Breaking News

    மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று இன்று மாலை பாரிய விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலையில் இருந்து மட்டக்களப்ப பஸ் நிலையத்துக்கு சென்ற பஸ் தயா மதுபான சாலைக்கு அருகில் இருந்த தொலைபேசி தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ்ஸின் வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக எதுவித உயிர் இழப்போ காயங்களோ ஏற்படவில்லை. இந்த பஸ் மோதியதன் காரணமாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் வர்த்தக நிலையம் சிலவற்றுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - thishon

    Fashion

    Beauty

    Culture