Sri lanka news

Advertisement

  • Breaking News

    பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வட பகுதிக்கு விஜயம்



    மூன்று நாள் விஐயமாக நேற்று (28) இலங்கை வந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

    இதன்போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் இன்று காலை யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

    இதன்போது, இராணுவம் வசமுள்ள காணிகள் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு தாம் தெளிவுபடுத்தியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

    இதேவேளை, சர்வதேச விசாரணைகள் குறித்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைருடன் உரையாடியதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை நேரில் கண்டறிந்தனர்.

    உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள வலி வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஹ்யூகோ ஸ்வைர் கேட்டறிந்தார்.

    வலி வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக வரைபடங்களுடன் ஹ்யூகோ ஸ்வைரிற்கு வலி  வடக்கு மீள்குடியேற்றக் குழு விளக்கமளித்தது

    Fashion

    Beauty

    Culture