Sri lanka news

Advertisement

  • Breaking News

    சர்வாதிகாரத்திற்கு எதிரான மற்றொரு போராட்டம்

    இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து வரலாற்றில் இது போன்றதொரு அரசியல் குழப்ப நிலைமை என்றுமே இருந்ததில்லை. நாட்டின் அரசி யல் களம் சமீப காலமாக பரபரப்பும் குழப்பமும் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இன்றைய அரசியல் நகர்வுகளைப் பார்க்கின்ற போது மக்களால் களநிலைமையை சரிவரப் புரிந்து கொள்ள முடி யாதிருக்கிறது. தேர்தல் கூட்டணிகளின் பிரசாரங்கள் இவ்வாரம் ஆரம்பமாகிய பின்னர்தான் யதார்த்த நிலைமை தெளிவாகப் புலப் படுமென்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள்பிரவே சமே இன்றைய குழப்ப நிலைமைக்கான அடிப்படைக் காரண மென்பது மறுக்க முடியாத உண்மை. எல்லையற்ற நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட அதியுச்ச பதவியை வகித்த ஒருவர் இப் போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்வதற் காக கடுமையான பிரயத்தனங்களில் இறங்கியுள்ளதனால் நாட்டின் அரசியல் வேடிக்கையாகிப் போயுள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலுமே முன்னாள் ஆட்சித் தலைவர்கள் எவரும் இவ்வாறு கீழிறங்கி வந்து வேடிக்கைக்குரியவராக ஆனது கிடையாது.

    மஹிந்தவின் வருகை விசித்திர சூழ்நிலையைத் தோற்றுவித்ததுடன் மாத்திரம் நின்று விடவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரு கூறுகளாகப் பிளவுபடுவதற்கும் மஹிந்தவின் வருகையே காரண மாகிப் போயுள்ளது.

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென்றே அனைவரும் நம்பியிருந்தனர். இறுதியில் அத் தனை எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக ஐ.ம.சு. முன்னணியின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடப் போகிறார் மஹிந்த.

    இம்முடிவானது ஜனநாயகத்தின் மீது உண்மையான பற்றுதல் கொண் டோருக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகா ரம் நிறைந்த ஒரு தசாப்த கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த மக்கள் தற்போது மஹிந்தவின் மீள்பிரவேசத்தினால் அதிர்ச்சிக்கும் வெறுப் புக்கும் உள்ளாகியிருப்பதில் நியாயம் உண்டு. முன்னாள் ஜனாதி பதி மஹிந்த மீண்டும் அரசியலில் செல்வாக்குப் பெறும் நிலைமை ஒன்று ஏற்படுமிடத்து நாட்டில் அராஜகமும் குடும்ப ஆட்சியும் மீண்டும் தலைதூக்கலாமென்பதே ஜனநாயக விரும்பிகளின் அச்ச மாகும்.

    அதேசமயம் ஐ.ம.சு. முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கு மஹிந்த வுக்கு இடமளிக்கப்பட்டமையானது இன்றைய நல்லாட்சிக்கு ஏற் படுத்தப்பட்டுள்ள களங்கமெனவும் அவர்கள் கருதுகின்றனர்.

    மஹிந்த தலைமையிலான முன்னைய ஆட்சியை அகற்றுவதற்காக மைத்திரிபாலவுக்கு தோள் கொடுத்து உதவிய முக்கிய அரசியல் வாதிகளெல்லாம் இப்போது வெறுப்புக்குள்ளாகி நிற்கின்றனர். முன் னாள் ஜனாதிபதி மறுபடியும் ஆட்சியில் இடம்பிடிப்பாரேயானால் மீண்டும் உருவாகக் கூடிய சர்வாதிகாரத்தை எவ்வாறேனும் வீழ்த்த வேண்டுமென்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது.

    ஐ.ம.சு. முன்னணியில் அங்கம் வகித்த முக்கிய அரசியல்வாதிகள் பலர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் அணி திரண்டிருப்பதற்கான காரணம் இதுதான். சர்வாதிகாரம், அராஜகம், குடும்ப ஆட்சி, ஊழல் முறைகேடுகள் மீண்டும் தலைதூக்காத வண்ணம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதே இன்றைய அரசியல் சூழலில் முதல் பணியென அவர்கள் எண்ணுகின்றனர். அரசியல் கட்சி பேதங்களெல்லாம் இரண்டாம் பட்சமென எண்ணியே ஐ.ம.சு. முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட் சித் தலைமையிலான ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’ என்ற அமைப்பின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர்.

    ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’ நேற்று உதயமாகியுள் ளது. மைத்திரியின் வெற்றிக்காக உழைத்த ராஜித சேனாரட்ண, பாட்டலி சம்பிக ரணவக்க, மாதுலுவாவே சோபித தேரர், அத்து ரலிய ரத்ன தேரர், அர்ஜுன ரணதுங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர போன்றோரெல்லாம் தற்போது பிரதமர் ரணில் தலைமையில் ஒன்றுசேர்ந்துள்ளனர். ஜாதிகஹெல உருமய, மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங் கிரஸ் மற்றும் சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றோர் குழு ஆகியோருடன் 49 சிவில் அமைப்புகளும் ஐ.தே.க. தலைமையில் கூட்டுச் சேர்ந்துள்ளன.

    அதேசமயம் ஐ.ம.சு. முன்னணியில் அங்கம் வகித்த முன்னாள் அமைச் சர்களான ரெஜினோல்ட் குரே, சரத் அமுனுகம ஆகியோரும் வெளியேறியுள்ளனர். மஹிந்தவுக்கு இடமளிக்கப்பட்டதனால் உரு வான அதிருப்தியின் வெளிப்பாடாகவே இவ்வெளியேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

    மற்றொரு ஆய்வும் இங்கு முக்கியமானது. ஐ.ம.சு.முவில் மஹிந்த வுக்கு இடமளிக்காமல் விட்டிருப்பின் அவரது அணியைச் சேர்ந்த சொற்ப தொகையினரே வெளியேறியிருப்பர். ஐ.ம.சு.மு. இவ்வாறு பிளவுபடும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

    ஆனால் மஹிந்தவுக்கு இடமளிக்கப்பட்டமையானது ஐ.ம.சு. முன் னணிக்குள் பாரிய எதிர்ப்பலைகளையே தோற்றுவித்துள்ளது. ஐ.ம. சு.மு. மாத்திரமன்றி சுதந்திரக் கட்சியே இன்று பிளவுபடும்படியாக மஹிந்த மீதான எதிர்ப்பு மேலோங்கிக் காணப்படுகிறது. சர்வாதி காரம் மீதான எதிர்ப்பாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

    கட்சி பேதங்களுக்கு அப்பால் ஐ.தே.க. தலைமையில் முக்கிய அரசி யல் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்பதானது சர்வதிகாரம் மீதான அச் சத்தையும் அதனை முறியடிக்க வேண்டுமென்ற திடசங்கற்பத்தை யும் எடுத்துக் காட்டுகிறது.

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய பத்து வருடகால ஆட்சி நாட்டில் எத்தனை வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதென்பதை இன்றைய அரசியல் கோலங்கள் தெளிவாகவே புரிய வைக்கின்றன.

    கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அராஜகத்துக்கு முடிவு கட்டு வதற்காக அரசியல் கட்சிகள் கைகோர்த்து நின்றன.

    அராஜகத்தை ஒழித்து தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயகத்தைப் பேணிக் காப்பாற்றுவதற்காக இப்போது கட்சிகள் மீண்டும் அணிதிரண்டு நிற்கின்றன.

    இன்றைய அரசியல் போக்குகள் அதனையே புலப்படுத்துகின்றன.

    Fashion

    Beauty

    Culture