பாண்டிருப்பு மாணவி ஒருவர் பெரிய நீலாவணையிலுள்ள அவரது அம்மம்மாவின் இல்லத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பு.சரண்யா (19 வயது) என்பராவார். குறித்த மாணவி கல்முனையிலுள்ள பிரபல தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றுவருவதுடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டிருப்பைச் சேர்ந்த இம்மாணவி பெரிய நீலாவணை கிராமத்தின் வீட்டுத் திட்ட வீதியிலுள்ள அவரது அம்மம்மாவுடன் வசித்து வந்த நிலையிலே வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் தொடர்பாக மேலிதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments