Sri lanka news

Advertisement

  • Breaking News

    கருப்பைக்குள் இருந்தவாறே டாக்டரின் கையைப் பிடித்த குழந்தை


    அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அலிசியா அட்கின்ஸ் என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 'சிசேரியன்' ஆபரேஷன் செய்வதற்காக டாக்டர் அலென் சாயர் என்பவர் ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தபோது, தாயின் கருப்பைக்குள் இருந்து வெளியே வராத அந்த குழந்தை, டாக்டரின் கையை இறகப் பற்றியது.

    ஆச்சரியமடைந்த டாக்டர், தனது கணவரை அழைத்து, தனது கையை அந்த குழந்தை பிடித்துக்கொண்டிருக்கும் அற்புத காட்சியை படம் பிடிக்க செய்தார். கிருஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள், அந்த அபூர்வ புகைப்படத்தை டாக்டர் அலென் சாயர், தனது 'பேஸ் புக்' பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில மணி நேரத்திற்குள்ளாகவே, 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேஸ் புக் பயன்பாட்டாளர்கள் இந்த புகைப்படத்தை 'ஷேர்'  செய்து பரவசமடைந்துள்ளனர்.

    Fashion

    Beauty

    Culture