கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்றகொழும்பு கண்டி பிரதான வீதியின் நெலும்தெனிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெலும்தெனிய பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற வாக விபத்தில் நால்வர் உயிரிழந்துடன் அவர்களின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியகட்சருமான ருவண் குணசேகர கூறினார்.
உயிரிழந்த நால்வருள் இரண்டு பெண்களும் அடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மணல் ஏற்றிய டிப்பர் வண்டியொன்று கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த வேனொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
விபத்து இடம்பெறும் சந்தரப்பத்தில் வேனில் 7 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களுள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் களுத்துறை நாகொடை பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர்களாகும் என பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூவர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments