கம்பஹா பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே தங்காபரணங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க சட்டப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து நேற்று (26) அதிகாலை 1.45 அளவில் நாட்டை வந்தடைந்த ஒருவரே நான்கு பொதிகளில் 363 தங்கச் சங்கிலிகள் மற்றும் 7 தங்க கைச்சங்கிலிகளை நாட்டிற்குள் கடத்திவந்துள்ளார்.
சந்தேகநபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்காபரணங்களின் பெறுமதி 110,75350 ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் சுங்கப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments