Sri lanka news

Advertisement

  • Breaking News

    உலகிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ

    உலகிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோட்டி சீட்டா என்னும் செயற்கை ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். சீட்டா வகை புலியின் உருவம் கொண்ட தலையின்றிய குறித்த ரோபோ, 29mp/hஎனும் வேகத்தில் ஓடக்கூடியது. இதற்கு முன் 24 mp\h எனும் வேகத்தில் ஓடக்கூடிய ரோபோ உருவாக்கப்பட்டிருந்ததே மிக பெரிய சாதனையாக இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் ஆராய்ச்சி திட்ட நிறுவனத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனை விட மிக வேகமாக ஓடக்கூடிய தொழில்நுட்பம் இந்த ரோபோவில் இணைக்கப்பட்டுள்ளதால், யுத்த களத்தில் மிக வேகமாக எதிரியை துரத்தி பிடிப்பதற்கும், தாக்குவதற்கும் என களத்தில் விட்டு பரிசோதிக்க போவதாக இதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    Fashion

    Beauty

    Culture