Sri lanka news

Advertisement

  • Breaking News

    பஸ் சாரதி மயங்கி விழுந்ததும் , பஸ்ஸை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த 13 வயது சிறுவன்

    மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி திடீரென உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்ததையடுத்து கட்டுப்பாட்டையிழந்து பயணித்த பஸ்ஸை 13 வயது மாணவன் ஒருவன் துரிதமாக செயற்பட்டு பஸ்ஸைப் பாதுகாப்பாக செலுத்தி பாதை ஓரத்தில் நிறுத்திய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

    பஸ் சாரதி மயங்கி விழுந்ததும் ஜெரேமி வுயிட்ஸ்சிக் என்ற மேற்படி 13 வயது சிறுவன் தனது ஆசனத்தை விட்டு எழுந்து ஓடிச் சென்று பஸ்ஸை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கா விட்டால் பாரிய விபத்து அனர்த்தம் ஒன்றை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இது தொடர்பில் ஜெரேமி விபரிக்கையில், பஸ் சாரதி மயங்கி விழுந்தபோது என்ன நேரிடுமோ என்று பயமாக இருந்தது. ஆனால் பஸ்ஸை செலுத்திச் சென்று பாதுகாப்பாக நிறுத்தியபோது எனக்கு மிகவும் பரவசமாக இருந்தது என்று கூறினார்.

    பஸ் சாரதி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    Fashion

    Beauty

    Culture