Sri lanka news

Advertisement

  • Breaking News

    20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை

    ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது.

    இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

    எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம்.

    இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும்.

    இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.

    இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

    இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.

    கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.

    மொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.


    Thanks- http://therinjikko.blogspot.in

    Fashion

    Beauty

    Culture