Sri lanka news

Advertisement

  • Breaking News

    Wi-Fi வலைப்பின்னலில் பிரச்னையா?



    Wireless Internet Network என அழைக்கப்படும் Wi-Fi இன்டர்நெட் இணைப்பின் மூலம் நாம் எந்த இடத்திலும் இருந்து இணையத்தை பயன்படுத்தலாம்.
    கேபிளை இணைக்காமல் எளிதாக இணையத்தை பயன்படுத்தலாம்.

    இருப்பினும் இதிலும் பல தொல்லைகளை சந்திக்க நேரிடலாம். இணைய இணைப்பை தரும் ரேடியோ அலைகளுக்கு பல தடைகள் உருவாகின்றன.

    சிக்னல் வட்டம் சுருங்குதல், வன்தட்டு பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் Wi-Fi இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

    1. மடிக்கணனியில் உள்ள Wi-Fi பட்டன்:

    காபி ஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கணனியில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும்.

    உங்கள் மடிக்கணனியில் Wi-Fi பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும், அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.

    2. கணனி மற்றும் Router Re Boot:

    Wi-Fi பட்டனை அழுத்திய பின்னரும், இணைய இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கணனி அல்லது இணைய இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், Router Re Boot செய்திடவும்.

    இதனால் இந்த சாதனங்களின் வன்தட்டு பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது மென்பொருள் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும்.

    அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்து விட்டு பின்னர் இணைக்கவும்.

    இதனை power cycling வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில் இவை சரியாக இயங்கத் தொடங்கும்.

    Fashion

    Beauty

    Culture