
(I.Suken)
கல்முனைப்பிரதேத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்கின்ற மாணவிகள் வீதிகளில் குழுமி நிற்கும் இளைஞர்களின் சேஷ்டையில் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கல்முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை,பாண்டிருப்பு போன்ற இடங்களில் பெருமளவிலான தனியார் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.இக்கல்வி நிலையங்களில் மாலை நேரத்
தில் கல்வி பயிலவென பெருமளவிலான மாணவிகள் வருகை தருகின்றனர்.இதன் மூலம் தமது கல்வித் தேவையினையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.இவ்வாறு காலை,மாலை நேரங்களில் கல்வி நிலையங்களுக்குச் செல்லும்போதும் ,வரும்போதும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் குழுமிநிற்கும் மாணவர் அல்லாத இளைஞர்கள் பலர் மாணவிகளிடம் சேஷ்டைகளில் ஈடுபடுகின்றனர்.இச் செய்தியானது தினகரன் பத்திரிகையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது...
Comments