world
2012ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகள் உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். இதன்படி ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.உலகம் அழிந்துவிடுமா என்று அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுவாமிஜி, இந்துமத சாஸ்திரப்படி 2012-ல் உலகம் ஒருபோதும் அழியாது. இந்த உலகம் அழிய இன்னும் பல ஆயிரம் வருடங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை.
Comments