Sri lanka news

Advertisement

  • Breaking News

    மகிழ்ச்சியாக வாழ சிறந்த இடம் சுவிட்சர்லாந்து - என ஆய்வில் தெரிய வந்துள்ளது.


    உடல் ஆரோக்கியம், வசதி, பொருளாதாரத்தில் மகிழ்ச்சியாக வாழ சுவிட்சர்லாந்து சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தி.எக்கனாமிஸ்ட் யூனிட் நிறுவனம் புத்தாண்டையொட்டி, மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ உலகில் எந்த நாடு சிறந்தது என ஒரு ஆய்வு நடத்தியது.

    இதில் சுவிட்சர்லாந்து நாடுதான் மேற்கூறிய அனைத்திற்கும் சாதகமான சூழலைக் கொண்டு முதலிடத் தை வகிப்பது தெரிய வந்தது.  வாழ்க்கை தரத்தில் இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 66-வது இடம் கிடைத்தது. இலங்கை 63-வது இடத் தையும், பாகிஸ்தான் 75-வது இடத்தையும், வங்காள தேசம் 77-வது இடத்தையும் வகிக்கின்றன.


    80 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்து கடந்த 1998-ம் ஆண்டு ஆய்வுப்படி இந்த விஷயத்தில் 13-வது இடத்தை வகித்தது. ஆனால் இந்த புத்தாண்டில், அங்கு பிறந்த மக்கள் செழிப்புடனும், நல்ல உடல் நலத்துடனும், பாதுகாப் புடனும் மற்றும் உயர்ந்த பொருளாதாரத்துடனும் வாழும் சூழல் உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 2-வது இடமும், சிங்கப்பூருக்கு 6-வது இடமும், நெதர்லாந்து 8-வது இடமும், கனடா 9-வது இடமும், ஆங்காங் 10-வது இடமும், அமெரிக்காவும், ஜெர்மனியும் 16-வது இடமும் வகிக்கின்றன. சீனா 49-வது இடமும், ரஷியா 72-வது இடமும் பெற்றுள்ளன.

    நல்ல சாதகமாக இயற்கைச் சூழலைப் பெற்றுள்ள கிரேக், போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகள் பின் தங்கி விட்டன. பொருளாதார வசதியில் முன்னணி வகிக்கும் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் மக்கள் வசதியாகவும், மகிழ்ச் சியாகவும் வாழும் சூழலைப் பெற்றிருக்கவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

    நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 5 இடத்தில் அடங்கியுள்ளது.

    Fashion

    Beauty

    Culture