Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஆஸ்கர் விருதுக்கு பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர் பரிந்துரை - Interview Video

    லைப் ஆஃப் பை " என்னும் ஆங்கில படத்தில், ஒரு தாலாட்டு பாடலை எழுதியதற்காக, சிறந்த பாடலாசிரியர் பிரிவில் ஆஸ்கார் விருதிற்கு பிரபல பின்னனி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

    2009 ஆம் ஆண்டு இந்தியாவின் வசம் வந்த ஆஸ்கார் விருது, இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவை நோக்கிவர வாய்ப்புகள் ஏற்பட்டதற்கு பாம்பே ஜெயஸ்ரீ தான் கரணம்.

    " லைப் ஆஃப் பை " என்னும் ஆங்கில படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ எழுதி, இசையமைத்து பாடிய தாலாட்டு பாட்டிற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப்பட்ட " லைப் ஆஃப் பை " திரைப்படம் இந்தியர்கள் நடிக்க, ஆங்கில முன்னணி இயக்குனர் ஆங் லீ இயக்கிய படமாகும்.

    பாம்பே ஜெயஸ்ரீ சிறு வயதிலிருந்தே கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறைப்படி கற்று தேர்ந்தவர்.பல முன்னணி இசை அமைப்பாளர்களுடன் பணிபுரிந்த பெருமையும் பாம்பே ஜெயஸ்ரீயை சாரும். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வசீகரா, அனல் மேலே பனித்துளி போன்ற பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.

    ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யபட்டிருக்கும் முதல் தமிழ் பாடல் பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய இந்த பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

    Fashion

    Beauty

    Culture