Sri lanka news

Advertisement

  • Breaking News

    உயிரிழந்த தாயின் கருவுக்குள் உயிரோடிருந்த குழந்தை


    அமெரிக்காவில் நடந்த ஒரு கொடூர கார் விபத்தில் உயிரிழந்த தாயின் கருவிலிருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. உயிருக்கு போராடிய அக்குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    அமெரிக்காவின் புரூக்ளின் நகரத்தைச் சேர்ந்தவர் ரைசி, இவர் 7 மாத கர்ப்பிணியாவார்.இவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தனது கணவருடன் அவசரமாக மருத்துவமனைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது.

    விபத்தில் சிக்கிய தம்பதியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணின் உடலை சோதித்த மருத்துவர்கள், தாய் இறந்த நிலையில் அவரின் கருவிலிருக்கும் குழந்தை உயிரோடு இருப்பதை கண்டறிந்தனர்.

    உடனடியாக அக்குழந்தையை வெளியே எடுக்க முயன்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தாயின் உடலிளிருந்து அந்த 7 மாத ஆன் குழந்தையை வெளியேற்றினர்.

    அந்த குழந்தை 1 கிலோ 800 கிராம் எடையுடன் இருந்தது. சுவாச கோளாறால் பாதிக்கபட்டிருந்த அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

    Fashion

    Beauty

    Culture