Sri lanka news

Advertisement

  • Breaking News

    சவூதியில் எஜமானினால் மாடி கட்டடத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கைப் பணிப்பெண்!


    சவூதி அரேபியாவில் தொழில்வாய்ப்புக்காக சென்று முதுகெழும்பில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் யுவதி ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

    ஹட்டன், எபோர்ட்ஸ்லி தோட்டப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் கிருஷ்ணவாணி என்ற 28 வயதான யுவதியே இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

    இந்த யுவதி வெளிநாட்டு தொழில்வாய்ப்புப் பெற்று கடந்த வருடம் ஜூலை மாதம் 5ஆம் திகதி சவூதி பயணமானார்.


    தனது எஜமானார் மூன்று மாடி கட்டடத்திலிருந்து தன்னைக் கீழே தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்ட பணிப்பெண் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

    இதன் காரணமாக தனது முதுகெழும்புக்கு கடும் பாதிப்புக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இநத சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

    அங்கவீனமுற்று நாடு திரும்புகின்ற வீட்டுப் பணிப்பெண்களுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நலன்புரி நிதியத்தினால் இழப்பீடு செலுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    Fashion

    Beauty

    Culture