Sri lanka news

Advertisement

  • Breaking News

    உலகின் மிக நீளமான ஆடை ! World’s longest dress


    இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஹென்றி ஹோண்ட் (29). இவர் உலகிலேயே மிக நீளமான ஆடையை தயாரித்துள்ளார். கவுன் வடிவிலான அந்த ஆடை 1500 சதுர அடி அகலமும், 150 அடி நீளமும் கொண்டது. பட்டினால் தயாரிக்கப்பட்ட அந்த கவுனில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன.
    இந்த ஆடை அறிமுக நிகழ்ச்சி லண்டனில் உள்ள டிரின்ட்டி லீட்ஸ் ஷாப்பிங் சென்டரில் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியல் ஒரு ராட்சத பரிசு பெட்டியில் இருந்து பிரபல மாடல் அழகி கோலெட் மார்ரோ தோன்றினார். அவர் ஹென்றி ஹேலண்ட் வடிவமைத்திருந்த அந்த கவுனை அணிந்து இருந்தார். அந்த ஆடை விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


    இது குறித்து ஆடை வடிமைப்பாளர் ஹென்றி ஹோலண்டே கூறும்போது, 'பூச்சிகள் அவற்றின் சிறகுகளே இந்த ஆடை தயாரிக்க என்னை தூண்டின' என்றார்.

    Fashion

    Beauty

    Culture