நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேரர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 17 கட்சிகள் மற்றும் 12 சுயேட்சைக்குழுவில் 15 கட்சிகளும் 6 சுயேட்சைக்குழுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலகர் வேதநாயகன் அறிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 08 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று 12 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் பரிசீலணை செய்யப்பட்டு இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக 15 கட்சிகளும் 6 சுயேட்சைக்குழுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்சிகளில் ஜனசெத பெரமுன கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, முன்னிலை சோசலிச கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி , ஐக்கிய சோசலிச கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி,சோசலிச சமத்துவ கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழர் மகாசபை ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , இலங்கை மக்கள் கட்சி,ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல சுயேட்சைக்குழுக்களாக, தம்பிப்பிள்ளை இருதயராணி தலைமையிலும்,பறனாந்து ஜோசெப் அன்டனி தலைமையிலும்,தில்லைநாதன் சாந்தராஜ் தலைமையிலும், நடேசபிள்ளை வித்தியாதரன் , ஆனந்தசங்கரி ஜெயசங்கரி தலைமையிலும் ஜெயபாலா ஜெயசுலக்சன் தலைமையிலுமான 06 சுயேட்சைக்குழுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
Home
Unlabelled
யாழ்.மாவட்டத்தில் போட்டியிட 15 கட்சிகள் 06 சுயேட்சைக்குழுக்களும் ஏற்பு
Comments