கொழும்பிலுள்ள சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (25) 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 5.00 மணிவரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கலட்டுவௌ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை மஹரகம, கொழும்பு 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீரின் வேகம் குறைவாக இருக்கும் என்றும் சபை அறிவித்துள்ளது.
Comments