Sri lanka news

Advertisement

  • Breaking News

    மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க மாட்டேன்;- ஜனாதிபதி

    ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

    அத்துடன் நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை மதிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

    மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான அதிவேகப் பாதையை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று காலை கலந்து கொண்டிருந்தார்.

    இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

    மீண்டும் நாட்டில் குடும்ப ஆட்சி ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றும் லஞ்சம், ஊழல், மோசடிகள் அற்ற நல்லாட்சியை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அர்ப்பனிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

    அத்துடன் ஜனாதிபதி என்ற வகையிலும், சுதந்திர கட்சியின் தலைவன் என்ற வகையிலும் எந்த முடிவெடுத்தாலும் ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பினை பாதிக்காத வகையிலேயே எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

    பொது மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் வழங்கிய அதிகாரத்தையும் மீறமாட்டேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

    Fashion

    Beauty

    Culture