நோர்வே தமிழ் உறவுகளின் நிதி உதவியில் எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்புக்கூடக கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் மூன்று மாத கால அழகுக்கலை தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ்களும் ,கருவிகளும் வழங்கும் நிகழ்வு நிறுவன வடகிழக்கு திட்ட பணிப்பாளர் திரு வே.வாமதேவன் அவர்களின் தலைமையில் தருமபுரம் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் 2015.07.14ம் திகதி பி.ப 2.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலக நிர்வாக அதிகாரி திரு.கு.சிவலிங்கம், கிராம சேவகர் திருமதி.வி அஜந்தா, சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.யோ.கோபிநாத், தருமபுரம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.இ.கலைமதி, மாதர் சங்க தலைவி. திருமதி கல்யாணி, பயிற்றுவிப்பாளர் திருமதி. ஜே.பாலதர்ஷினி , வெளிக்கள உத்தியோகத்தர் திரு.கே. ஜெகரூபன் மற்றும் பயிலுனர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Comments