வழக்கத்திலுள்ள ஓய்வூதிய முறை தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விஷேடமாக முப்படையினருக்கு தற்கொழுது வழங்கக்கூடிய ஓய்வூதிய முறை தொடர்பாகவே கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாக்க ஞாபகர்த்த சர்வதேச மாநட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். முப்படையிலும் பணியாற்றும் படையினர் 22 வருடகால சேவை நிறைந்ததுடன் ஓய்வு பெறுவதாகவும் அதன்போது அவர்களின் வயது 40 அல்லது அதனை அண்மித்ததாகவும் இருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். சிறந்த திறமை, நீண்ட அனுபவம் உடைய இந்த நாட்டின் மிகப்பெரிய வளமான இந்த படையினருக்கு குறைந்த வயதில் ஓய்வு வழங்குவதானது நாட்டுக்கு ஒரு குறைபாடாக அமையும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
Comments