வவுனியா சிறிராமபுரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆற்றங்கரை பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் சிலர் குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இராணுவத்தால் யுத்த காலத்தின் போது வழங்கப்பட்ட அடையாள அட்டை, தண்ணீர் போத்தல் உள்ளிட்டவையும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த என எஸ்.தம்பிரசா (வயது 69) அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments