
இந்த கொலை முயற்சி தொடர்பான தகவல்கள் 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே பதிவாகியிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் சிறையிடப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராஜா ஜெனீவன் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, மேல் நீதிமன்ற நீதவான் ஆமேந்ர செனவிரத்ன, அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்
பிரதிவாதிக்கு 10ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.
Comments