Sri lanka news

Advertisement

  • Breaking News

    சிறையில் உள்ள காத­ல­னுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட காதலி

    சிறையில் உள்ள தனது காத­ல­னுடன் சேர்ந்து பாதாள உலகத் தலைவன் ஒரு­வனின் பெயரைக் கூறி தொலை­பேசி ஊடாக அச்­சு­றுத்தல் விடுத்து வர்த்­த­கர்­க­ளிடம் கப்பம் பெற்று வந்த பெண்­ணொ­ரு­வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்­துள்­ளது.

    தெமட்­ட­கொ­டையைச் சேர்ந்த குறித்த பெண்ணை மாளி­கா­வத்­தையில் வைத்து கைது செய்­த­தாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு குறிப்­பிட்­டது.

    அத்­துடன் இவ­ரி­ட­மி­ருந்து ஆறு கைய­டக்க தொலை­பேசிகள், 30550 ரூபா பணம் என்­பன மீட்­கப்­பட்­ட­தாகவும் மேற்­படி பிரிவு தெரி­வித்­தது.
    கைது செய்­யப்­பட்ட 30 வய­தான குறித்த பெண் தனது காதலன் ஆயுள் தண்­டனை கைதி­யாக சிறையில் உள்­ள­தா­கவும் இந் நிலை­யி­லேயே கைய­டக்கத் தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்தி ஈஷி கேஸ் முறை மூலம் கப்பம் பெற்று வந்­த­தா­கவும் தெரி­வித்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார். இந் நிலையில் அப்பெண் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அவர் சுமார் 80 இலட்சம் ரூபாவை இவ்­வாறு பல வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து கப்­ப­மாக பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

    இந்த சம்­பவம் குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,
    நேற்று முன் தினம் இரவு ஈஷி கேஸ் ஊடாக கப்பம் பெறும் நட­வ­டிக்கை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

    இது குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் அன்­றைய தினம் மாலை வேளை­யி­லேயே குறித்த பெண்ணை பொலிஸ் பொறுப்பில் எடுத்து விசா­ரணை செய்­தனர். இதன் போது அப்­பெண்­ணிடம் இருந்த கப்பம் கோர பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் 6 கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும் 30 ஆயி­ரத்து 550 ரூபா பணத்­தையும் பொலி­ஸார் கைப்­பற்­றினர்.



    இந் நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வரை குறித்த பெண்­ணுக்கு எதி­ராக பல்­வேறு வர்த்­த­கர்கள் பொலிஸில் முறைப்­பா­டு­களை செய்து வருவதாகவும் அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Fashion

    Beauty

    Culture