விசேட வைத்திய நிபுணர்களினால் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு தனியார் சுகாதார சேவை கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு 2,000 ரூபாவை அதிகபட்சமாக அறவிடமுடியும் என கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார் .
மேலும் தனியார் வைத்தியசாலை மற்றும் மருந்தகங்களில் சிகிச்சை வழங்கும் போது அறவிடக்கூடிய நிர்ணய
விலைகளும் அறிவிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒரு நோயாளரை 10 நிமிடத்திற்குள் பரிசோதனைக்குட்படுத்தி சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல்களை பின்பற்றாதவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தனியார் சுகாதார சேவை கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
Home
Unlabelled
தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களால் அறவிடப்படும் கட்டணத்திற்கு கட்டுப்பாடு
Comments