Sri lanka news

Advertisement

  • Breaking News

    2016 ஆம் ஆண்டு உலகம் எதிர் நோக்கவுள்ள ஆபத்து

    2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது. அடுத்த ஆண்டில் எல் நினோ காரணமாக அடுத்த 6 மாதங்கள் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. 2015ம் ஆண்டு உலகின் மிக மோசமான வெப்பம் நிறைந்த ஆண்டாக வானிலை ஆய்வாளர்கள் கூறு வந்தனர். ஆனால் 2016ம் ஆண்டு வெப்பத்தின் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    ஏற்கனவே எல் நினோவின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 20 முதல் 30 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், 2016ம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும், இதனால் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    எல் நினோவால் மிக அதிக அளவிலான கடலின் வெப்பம், நிலப்பரப்பை நோக்கி வரும். 2016ல் புவியின் ஒரு பகுதி கடுமையான வெப்பம், வறட்சியாலும், மற்ற பகுதி கடுமையான மழை மற்றும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டின் காரணமாகவும் மனித குலம் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    எல் நினோவால் 2016ல் எந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கமும், வறட்சியும் இருக்குமோ அதற்கு நேர்மாறாக லா நினாவால் அதற்கடுத்த ஆண்டு கடுமையாக மழை, வெள்ளம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Fashion

    Beauty

    Culture