Sri lanka news

Advertisement

  • Breaking News

    மது­போ­தையில் அம்­பியூலன்ஸ் வண்­டியை தவ­றான திசையில் செலுத்திய சாரதி

    மது­போ­தையில் அம்­பியூலன்ஸ் வண்­டியை செலுத்­தி­யது மாத்­தி­ர­மின்றி அதனைத் தவ­றான திசையில் செலுத்திச் சென்ற சாரதிெயாருவர் கண்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
    நேற்று முன்­தினம் இரவு மொன­ரா­க­லை­யி­லி­ருந்து ஆபத்­தான நோயாளி ஒருரை கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு அம்­பியூலன்ஸ் வண்­டியில் எடுத்து வந்த அம்­பியூலன்ஸ் வண்டிச் சார­தியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். இவர் இரவு வேளை நோயா­ளியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­து­விட்டு பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சா­லைக்கு விரை­வாக திரும்பிச் செல்­வ­தற்­காக அம்­பியூலன்ஸ் வண்­டியை கண்டி வாவிக்­கரை அருகில் பள்ளி வீதியில் தவ­றான திசையில் வேக­மாக செலுத்திச் சென்­றுள்ளார்.

    இதனை அவ­தா­னித்த அங்கு கட­மை­யி­லி­ருந்த போக்­கு­வ­ரத்துப் பிரிவு பொலிஸார் அதனை தடுத்துநிறுத்தி சோதனை மேற்­கொண்­ட­போது சாரதி மது­போ­தையில் காணப்­பட்­ட­துடன் அவ­ரிடம் அம்­புலன்ஸ் வண்­டியை செலுத்­து­வ­தற்­கான சாரதி அனு­ம­திப்­பத்­திரப் வாகன காப்­பு­றுதி பத்­திரம் என்­பன இருக்­க­வில்லை.

    அவரை கைது செய்த பொலிஸார் அவ­ரது வாக்கு மூலங்­களை பதிவு செய்துக் கொண்ட பின்னர் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி கண்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

    Fashion

    Beauty

    Culture