Sri lanka news

Advertisement

  • Breaking News

    புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமான வழக்கு ஆரம்பம்

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வில்பத்து சரணாலயத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    பலாலியிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துகொண்டிருந்த அன்டனோவ்-32 வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மிஷேல் (எறிகணை) தாக்குதலில் தலாவ வீரவெள பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது.

    இவ்விமான விபத்தில் ரஷ்யா விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர். இந்த சம்பவம், தொடர்பான சந்தேகநபர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரையும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் எறிகணை படையணியின் உறுப்பினர்கள் இருவரையும் ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அநுராதபுர விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதியே மேற்கண்ட கட்டளையை நேற்று திங்கட்கிழமை பிறப்பித்தார்.

    சம்பவம் இடம்பெற்று 15 வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

    Fashion

    Beauty

    Culture