நேற்றைய தினம் எரிமலை குமுறியுள்ளதுடன் புகை மற்றும் சாம்பல் எரிமலையிலிருந்து வெளிப்பட ஆரம்பித்துள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் எரிமலை இரு தடவைகள் குமுறியதால் வெளியாகிய சாம்பல் மற்றும் புகை 1243 மைல் தூரத்திற்கு பரவியுள்ளது.
எரிமலை முதல் தடவை குமுறியதன் பின்னர் 1.5 மணித்தியாலத்தில் இரண்டாவது தடவையாகவும் குமுறியுள்ளது.
தென் மேற்கு மெக்ஸிக்கோவில் இந்த எரிமலை அமையப்பெற்றுள்ளது.
அபாயகர எரிமலைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த எரிமலை இந்த வருடம் ஜூலை மாதம் 9 ஆம் திகதியும் குமுறியிருந்தது.
மெக்ஸிக்கோவில் 3000 மேற்பட்ட எரிமலைகள் உள்ள போதிலும் 14 எரிமலைகளே இயக்கத்தில் உள்ளன.
Comments