Sri lanka news

Advertisement

  • Breaking News

    பருத்தித்துறையைச் சேர்த்த காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

    பருத்தித்துறை முனைப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (28) அதிகாலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர், முனை வெளிச்ச வீட்டுக்கு அருகிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

    முனைப்பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவரின் சடலமே இவ்வாறு  கரையொதுங்கியுள்ளது. முனைப் பகுதியிலிருந்து 3 மீனவர்கள் படகொன்றில் கடலுக்குள் சென்ற போது, கடும் கடற்கொந்தளிப்பால் அவர்களின் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது.

    இவர்களில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்த நிலையில் மற்றொருவரை அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் காற்றாப்பியுள்ளனர். மூன்றாவது நபரே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    Fashion

    Beauty

    Culture