மின்சார இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த கையடக்கத் தொலைபேசியின் மின்னேற்றி வயரை தனது வாயில்போட்டு மென்ற குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் திவுலப்பிட்டிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத் தொலைபேசியின் மின்னேற்றி வயரின் ஊடாக குழந்தையை மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான குழந்தை திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த சம்பவத்தில் ஏழு மாதங்கள் நிரம்பிய குழந்தையே உயிரிழந்துள்ளது.
Comments