Sri lanka news

Advertisement

  • Breaking News

    ட்விட்டரில் வடிவேலு!

    தனது அன்பார்ந்த ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதற்காக தயாராகிவிட்டார் நடிகர் வடிவேலு.

    நீண்ட இடைவேளைக்குப் பின் நமது வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’. இதில் வைகைப்புயலுக்கு ஜோடியாக ‘பில்லா 2′ புகழ் மீனாக்ஷி திக்ஷித் நடிக்கிறார்.

    ‘போட்டா போட்டி’ புகழ் யுவராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

    இதில் வடிவேலு இரண்டு வேடங்களில் தோன்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க தீயா வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தனது ரசிகர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பிய வைகைப்புயல், தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் களமிறங்கிவிட்டார்.

    https://twitter.com/Actor_Vadivelu


    Fashion

    Beauty

    Culture