Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லாப சாதனை - காணொளி


    கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் லாபமீட்டியிருப்பதாக , ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
    இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்ப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது.
    இந்த லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பது ஐ போன் -6 மற்றும் சிக்ஸ் ப்லஸ் மொபைல் தொலைபேசிகளின் சாதனை படைக்கும் விற்பனையின் விளைவாகும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
    சீனாவில் இந்த விற்பனை குறிப்பாக பலமாக இருந்தது. அதிலும், ஐ போன்கள் விற்பனை சீனாவில் முதல் முறையாக அமெரிக்க விற்பனையைவிட அதிகமாக இருந்தது.
    டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவியேற்றபோது அவர் அவருக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெற்ற வெற்றியை அவரால் பெற முடியுமா என்பது குறித்து சந்தேகங்கள் இருந்தன, ஆனால் இப்போது அவருக்கு முதலீட்டாளர்களின் ஆதரவு இருக்கிறது.

    Fashion

    Beauty

    Culture