Sri lanka news

Advertisement

  • Breaking News

    புதிய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

    அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

    புதிய பிரதம நீதியரசர், எதிர்வரும் திங்கட் கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புதிய பிரதம நீதியரசரின் நியமனம், நாடாளுமன்ற அரசியலமைப்பு சபைக்கு அனுப்பவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.



    43வது பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க இன்று அந்த பதவியிலிருந்து ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

    இதற்கான பிரியாவிடை நிகழ்வொன்று இன்று முற்பகல் புதுக்கடை நீதிமன்ற கட்டிட தொகுதியில் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

    Fashion

    Beauty

    Culture