இன்று முதல் 870 ரூபாவிற்கு சீமெந்து மூட்டை ஒன்றினை கொள்வனவு செய்யமுடியும் என நிதி அமைச்சர் ரவி கருணானாயக்க தெரிவித்துள்ளார்.
சீமெந்து உற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்தார்.
இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சீமெந்தின் விலை குறைக்கப்பட்டிருந்த போதும் இதுவரை சந்தையில் சீமெந்து விலை குறைக்கப்படவில்லை எனவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சீமெந்து தொழிற்சாலைகளில் நேரடியாக சீமெந்தினை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கும் குறிப்பிட்ட சில உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
Comments